மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவும் இல்லையா… முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர் ஜே பாலாஜி!

vinoth
வியாழன், 27 ஜூன் 2024 (10:52 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் சமீபகாலமாக ஆர் ஜே பாலாஜியின் படங்கள் எதுவும் ஓடாத நிலையில் இப்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதால் அவருக்கு பதில் த்ரிஷாவை அம்மன் வேடத்தில் நடிக்க மறுத்ததால் இப்போது அந்த வேடத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது சமந்தாவிடமும் இந்த படத்துக்காக பேச்ச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த பாகத்துக்கு ‘மாசாணி அம்மன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா, தமன்னா பெயரில் போலி வாக்காளர் பட்டியல்: ஹைதராபாத்தில் பரபரப்பு - காவல்துறை வழக்குப்பதிவு

ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments