Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் பிட்டு படமா? - த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படப் பாடலுக்கு எதிர்ப்பு

பெண்கள் பிட்டு படமா? - த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படப் பாடலுக்கு எதிர்ப்பு
, வியாழன், 30 ஜூலை 2015 (11:39 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், கயல் ஆனந்தி நடித்துள்ள படம், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

ட்ரெய்லரில் ஒரு காட்சியில், எம்ஜிஆர் படம் பொறித்த டி ஷர்ட் அணிந்து ஜீ.வி.பிரகாஷ் தோன்றுகிறார். அந்தக் காட்சியில் நாயகி எடுத்துவீசும் செருப்பு அவரது டி ஷர்ட்டில் விழுகிறது. இது, எம்.ஜி.ஆரை அவமதிக்கும் செயல் என்று எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 
இந்நிலையில், படத்தின் பாடல் ஒன்றும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. ரோகித் இந்தப் பாடலை எழுதியுள்ளார். நான் உனக்கு பேய் படம், நீ எனக்கு பிட்டு படம் என இதில் ஒரு வரி வருகிறது. பிட்டு படம் என்பது ஆபாசப் படத்தை குறிக்கும். அப்படியெனில், பெண்கள் ஆபாசப் படமா என்று பெண்கள் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாடலை மாற்ற வேண்டும் என்று கூறி தணிக்கைக்குழுவுக்கு புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil