Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்முறையாக தனுஷுடன் ஜோடி சேரும் த்ரிஷா...?

முதல்முறையாக தனுஷுடன் ஜோடி சேரும் த்ரிஷா...?
, புதன், 29 அக்டோபர் 2014 (09:45 IST)
வேலையில்லா பட்டதாரி டீம் அப்படியே இன்னொரு படத்தில் இணைகிறது. வேலையில்லா பட்டதாரியை இயக்கிய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அதற்கான ஸ்கிரிப்டை எழுதி வருகிறார். 
இந்தப் படத்தில் அமலா பாலுக்குப் பதில் கயல் நாயகி ஆனந்தி நடிப்பார் என செய்தி வெளியானது. ஆனால் அதனை வேல்ராஜ் மறுத்தார். ஆனந்தியை நடிக்க வைக்கப் போவதில்லை என்று அவர் விளக்கமளித்தார்.
 
இந்நிலையில் தனுஷ் ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இதுவரை த்ரிஷாவுடன் நடித்ததில்லை. ஆனால் இருவரும் திக் ப்ரெண்ட்ஸ். சமீபத்தில்கூட இருவரும் கட்டியணைத்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டனர்.
 
ஆதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்படவில்லை எனினும் த்ரிஷா தனுஷுடன் நடிப்பது உறுதி என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil