Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை வில்லன் வேடத்தை இழந்த மலையாள நடிகர்! ஹெச் வினோத் பகிர்ந்த ரகசியம்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (09:30 IST)
வலிமை படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனிக்கபூர் வலிமை திரைப்படம் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளார். வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரான கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஹெச் வினோத் ‘முதலில் வலிமை படத்தில் வில்லனாக நடிக்க டோவினோ தாமஸிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவரும் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவரின் பல படங்களினால் தேதிகள் கிடைக்காததால் நடிக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments