Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’… பிளாக்பஸ்டர் ஹிட்!

vinoth
வியாழன், 15 மே 2025 (10:27 IST)
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றுன் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக கடந்த வாரம் ரிலீஸானது சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம். சிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உருவாகி இருந்தது.

இதனால் படம் ரிலீஸான பின்னர் நாளுக்கு நாள் வசூலின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டும் சுமார் 5 மற்றும் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. அதற்கடுத்த வேலை நாட்களிலும் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறதாம். இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 40 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகவும், உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது இந்த திரைப்படம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவின் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுவா? டைட்டிலே வித்தியாசமா இருக்குதே...!

அஜித்தின் அடுத்த படத்தை சிவாஜி புரடொக்சன்ஸ் தயாரிக்கின்றதா? மருமகன் ஆதிக் முயற்சி?

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் இணையும் மணிகண்டன்.. எப்படி ஒப்புக்கொண்டார்?

’கூலி’ இசை வெளியீட்டு தேதி மாற்றப்படுகிறதா? ஜூலையில் இல்லை என தகவல்..!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்ருதிஹாசன்… கண்கவர் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments