இன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்தநாளை தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த முக்கியமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. தற்போது தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் தோனியின் சிக்ஸரை காண்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தருகின்றனர்.
இன்று எம்.எஸ்.தோனி தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள் பலரும் தோனி ஸ்டேட்டஸ் வைப்பது, தோனி புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனி இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இவர்களுடன் நடிகர் சல்மான்கானும் கலந்துக் கொண்டு தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K