Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் கலாய்ன்னா நியாபகம் வருபவர் அவர்தான்! – மணிவண்ணன் நினைவு தினம்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (11:24 IST)
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குனராகவும் , நடிகராகவும் விளங்கிய மணிவண்ணன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பல படங்களை இயக்கிய மணிவண்ணன், மிகசிறந்த நடிகராகவும் இருந்துள்ளார். ஆரம்பத்தில் கல்லூரி நாட்களில் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை பார்த்த மணிவண்ணன் அதுகுறித்து பாரதிராஜாவுக்கு கடிதமே எழுதியுள்ளார்.

பின்னாட்களில் பாரதிராஜாவின் படங்களான நிழல்கள், டிக் டிக் டிக் போன்ற படங்களில் பணியாற்றிய மணிவண்ணன் பாரதிராஜாவின் படங்களிலேயே நடித்தும் உள்ளார். பின்னர் இயக்குனராக நூறாவது நாள், அமைதிப்படை போன்ற தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படங்களை இயக்கிய மணிவண்ணன் 90களுக்கு பிறகு அதிகமான படத்தில் நடித்துள்ளார்.

ஈழ ஆதரவு, தமிழ் தேசிய ஆதரவாளரான மணிவண்ணன் தொடர்ந்து அவரது படங்களில் தமிழ் அரசியல், பகுத்தறிவு, கடவுள் மறுப்பு போன்றவற்றையும் நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் அவரது அரசியல் பகடி ஜோக்குகள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருவதே அவரது கலை இருப்பின் சாட்சியாக நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments