Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்"- திரிஷா

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (16:10 IST)
நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி  சர்சசைக்குரிய பேசிய விவகாரத்தில்  நடிகை திரிஷா தன் எக்ஸ் தளத்தில் தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தெய்வீகம் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் திரை உலக சங்கங்கள் தெரிவித்தனர். .
 
நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் இது குறித்து காவல்துறையினர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
இந்த நிலையில் த்ரிஷா குறித்து தான் உள் அர்த்தத்துடன் எதுவும் பேசவில்லை என்றும் எனவே மன்னிப்பு கேட்க முடியாது என்றும் மன்னிப்பு கேட்கும் பரம்பரை கிடையாது என்றும் வீராவசமாக சமீபத்தில் அவர் பேட்டி அளித்திருந்தார். 
 
இந்த நிலையில் தற்போது அவர் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். 
 
இது குறித்து கூறியதாவது:
 
''எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். "  என்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில், நடிகை திரிஷா தன் எக்ஸ் தளத்தில் 'தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தெய்வீகம் 'என்று தெரிவித்துள்ளார்.
 
நடிகை திரிஷா பற்றி சர்சைக்குரிய வகையில் பேசியதாக  பதிவு செய்யப்பட்ட  முன்ஜாமீன் கோரி நடிகர் வழக்கில் மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

சாய் அப்யங்கருக்கு வாய்ப்பு வருவது இதனால்தான்… விஜய் ஆண்டனி கருத்து!

வொர்க் அவுட் ஆனதா வடிவேலு &fafa மேஜிக்?… முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments