Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்துக்கு நாளை முதல் டிக்கெட் புக்கிங்

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (14:13 IST)
விஜய் படத்துக்கு நாளை முதல் டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகிறது என அறிவித்துள்ளது ஜி.கே.சினிமாஸ்.




வருகிற 22ஆம் தேதி ‘இளைய தளபதி’ விஜய்க்குப் பிறந்த நாள். ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் பிறந்த நாளுக்கு, அவர்கள் ஏற்கெனவே நடித்த பிளாக் பஸ்டர் படங்களை ரசிகர்களுக்காக மீண்டும் சிறப்புக் காட்சியாகத் திரையிடுவார்கள். சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி உள்ளிட்ட சில திரையரங்கங்கள் இப்படிச் செய்வார்கள்.

அதன்படி, விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, போரூரில் உள்ள ஜிகே சினிமாஸ், ‘போக்கிரி’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிட உள்ளது. விஜய், அசின், பிரகாஷ் ராஜ், நெப்போலியன் நடிப்பில் 2007ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘போக்கிரி’. இந்தப் படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார்.
ஜூன் 22ஆம் தேதி மாலை 7 மணிக்கு இந்தப் படம் திரையிடப்பட இருக்கிறது. இதற்கான டிக்கெட் புக்கிங், நாளை முதல் தொடங்குகிறது. ரோகிணி தியேட்டரில், ‘தலைவா’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என சமீபத்திய படங்களைத் திரையிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments