பிரசாந்துக்கு எப்போ கல்யாணம்?... ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு தியாகராஜனின் எமோஷனல் பதில்!

vinoth
சனி, 17 ஆகஸ்ட் 2024 (09:47 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தெதி திரையரங்குகளில் ரிலீஸானது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்து, சில ஆண்டுகள் காத்திருந்து இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள். அந்த  நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தகன் திரைப்படம் வெளியாகி முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையடுத்து படத்தின் சக்ஸஸ் மீட் நடந்த நிலையில் அதில் படக்குவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இயக்குனர், நடிகர் கே எஸ் ரவிக்குமார், “தியாகராஜன் சார், படம் ஹிட்டானா பிரசாந்துக்கு கல்யாணம் பண்ண போறதா சொன்னீங்க?.. இப்பதான் படம் ஹிட்டாயிடுச்சுல்ல. எப்ப கல்யாணம் சொல்லுங்க?” என்று கேட்டார்.

அதன் பிறகு பேசிய தியாகராஜன் “என் மனதை வருத்திக் கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது பிரசாந்தின் திருமண வாழ்க்கைதான். நானும், அவர் அம்மாதான் அதைப் பற்றி பேசாத நாட்களே இல்லை. இப்போது ஒரு குடும்பப் பாங்கான பெண்ணாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லா பட வேலைகளையும் நிறுத்திவிட்டு, பிரசாந்துக்கு திருமணம் செய்வதுதான் முதல் வேலை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்