துணிவு படத்தின் தெலுங்கு ரிலீஸ்… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (08:58 IST)
துணிவு படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர். ஆனால் வாரிசு படத்துக்கான திரையரங்கு ஒப்பந்த வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் ஒட்டுமொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்போது வெளிநாடுகளில் அதிகளவில் திரையரங்குகள் முன்பதிவு செய்யும் வேலையை லைகா நிறுவனம் சைலண்ட் ஆக தொடங்கியுள்ளதாம். இதனால் வெளிநாடுகளில் துணிவு திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிறமொழி படங்களுக்கு தெலுங்கு ரிலீஸில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக என சொல்லப்படும் நிலையில், இப்போது துணிவு படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. IVY புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணா எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments