Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண்குமார் படத்தில் விக்ரம்முடன் மோதப்போகும் மூன்று வில்லன்கள்!

Chiyaan Vikram
vinoth
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:42 IST)
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தனது நடிப்புத் திறனால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் விக்ரம். யாராலும் நடிக்க முடியாத பல கடினமான கதாப்பாத்திரங்களை கூட எடுத்து செய்யும் இவரின் ஆர்வத்திற்கு அந்நியன், பிதாமகன், சேது போன்ற படங்கள் நல்ல தீனியாய் அமைந்தன.

பின்னர் பல கெட்டப்புகளில் விக்ரம் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை.  கடைசியாய் அவர் நடித்த்ருந்த கோப்ரா உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின. இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் உடன் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கடுத்து விக்ரம் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இன்னும் இரண்டு வில்லன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க பஹத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments