Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

vinoth
புதன், 4 டிசம்பர் 2024 (09:11 IST)
நடிகராக சென்று முதலில் ஹிட்கள் கொடுத்து பின்னர் தடுமாறிய இயக்குனர் சுந்தர் சி இயக்குனராகக் கம்பேக் கொடுத்த படம்தான் ‘கலகலப்பு’. அவர் ஸ்டைலிலான ஜாலி படமாக உருவான கலகலப்பு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி எடுத்தார். ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றிப் பெறவில்லை.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் இதன் மூன்றாம் பாகம் பற்றிய தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்னர் சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ இதுபற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “அவ்னி சினிமாஸும், பொழுதுபோக்கின் அரசனான சுந்தர் சியும் தொழிலதிபர் கண்ணன் ரவியோடு இணைந்து கலகலப்பு 3 ஐ உருவாக்க உள்ளோம். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

இந்த கண்ணன் ரவி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர். ஏற்கனவே சாந்தணுவின் ‘இராவணக் கோட்டம்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்தையும் இவர்தான் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது கலகலப்பு 3 பற்றி மேலும் சில விவரங்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக மிர்ச்சி சிவா, விமல் மற்றும் வாணி போஜன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments