Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? மாயா தப்பித்துவிட்டாரா?

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (13:30 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம்  தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா, நிக்சன் மற்றும் மாயா ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்த நிலையில் இவர்களில் மாயா தான் குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாகவும் அதனால் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பிக் பாஸ் மற்றும் கமல்ஹாசனின் ஆதரவு மாயாவுக்கு இருப்பதால் அவர் வெளியேற்ற வாய்ப்பு இல்லை என்றும் ஒரு சிலர் கூறியிருந்தனர். அதுபோலவே இந்த வாரம் மாயா வெளியேறவில்லை என்றும் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் ரவீனா என்றும் கூறப்படுகிறது.

தனியார் அமைப்புகள் எடுத்த வாக்குப்பதிவில் மாயா, நிக்சன் ஆகிய இருவரை விட ரவீனா அதிக வாக்குகள் பெற்று இருந்தார். ஆனால் ரவீனா வெளியேற்றப்படுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 மாயா நீண்ட வாரத்துக்கு பிறகு இந்த வாரம்தான் நாமினேஷனில் சிக்கியிருந்த நிலையில் அவரை வெளியேற்ற பார்வையாளர்கள் முடிவு செய்த நிலையில் பிக் பாஸ் வேறு விதமாக முடிவு செய்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments