Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தனிக்கட்சி தொடங்க இதுவே சரியான தருணம்: ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா கருத்து!

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (17:21 IST)
ரஜினிகாந்தின் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பபட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார்.

 
 
இதனை தொடர்ந்து நல்லவர்களுக்கு எப்போதும் எங்களுடைய கட்சியில் இடம் உண்டு என பா.ஜனதா தலைவர்கள்  ரஜினிகாந்திற்கு பா.ஜனதா தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் பாஜக கட்சியின் எம்.பி.யும் நடிகருமான சத்ருகன்  சின்ஹா, ரஜினியை தனிக்கட்சி தொடங்கும் விதமாக டுவிட்டரில் வலியுறுத்தி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
 
தமிழ்நாட்டின் டைட்டானிக் ஹீரோ, இந்தியாவின் மகன் என ரஜினியைப் பாராட்டியும், இதுவே சரியான நேரம் எனவும் ரஜினியை உத்வேகப்படுத்திய அவர், ரஜினி வேறு யாருடனாவது இணைவதற்கு பதில், பிறர் ரஜினியிடம் வந்து இணைந்தால்  சிறப்பு எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

 
மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரஜினி அரசியலுக்கு வருவதை தேசம் ஆவலோடு எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ரஜினி அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாடி நல்ல முடிவை எடுக்கும்படி  கேட்டுகொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments