Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'96' படத்தின் உண்மையான கிளைமாக்ஸ்: நடித்து காட்டிய விஜய்சேதுபாதி-த்ரிஷா

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (07:38 IST)
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் படமாக இருந்தாலும் அந்த படத்தில் நாயகன், நாயகி கடைசி வரை கட்டிபிடிக்கவே மாட்டார்கள். மேலும் 'ஐ லவ் யூ' என்ற வசனம் இல்லாத ஒரே காதல் படம் இது ஒன்றாகத்தான் இருக்கும்

இந்த படத்தின் உணர்ச்சிமயமான விமான நிலைய கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் இணைய வாய்ப்பில்லை என்றாலும், குறைந்தபட்சம் தங்கள் காதலை வெளிப்படுத்த ஒரே ஒருமுறை கட்டிப்பிடிப்பார்கள் என்று படம் பார்த்த அனைவருமே நினைத்தனர். ஆனால் அப்படி ஒரு காட்சியை இயக்குனர் கடைசிவரை வைக்கவில்லை

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்த படத்தின் 100வது நாள் விழாவில் விஜய்சேதுபதி, த்ரிஷாவும் மேடைக்கு வந்து ஒரே ஒருமுறை கட்டிப்பிடித்து ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் கேட்டுக்கொள்ள, அதனையேற்று மேடைக்கு வந்த விஜய்சேதுபதி, த்ரிஷா கட்டிப்பிடித்தனர். அப்போது '96' படத்தின் தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க விழாவிற்கு வந்திருந்த அனைவரும் கைதட்டினர். மேலும் 'இதுதான் உண்மையான '96' கிளைமாக்ஸ் என்று விஜய்சேதுபதி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments