Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு இதுதான் !

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (22:50 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, இன்று மனுதாக்கல் செய்தார். அதில், தனது அசையும் அசையா சொத்துகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

தனது பெயரில் 18 கோடி ரூபாயில் அசையா சொத்துகள் இருப்பதாகவும், பார்ச்சூனர், டொயோட்டா, மாருதி ஸ்விப்ட் போன்ற கார்கள் உள்ளதாகவும், தங்க நகைகள் 8.55 கிலோ உள்ளதாகவும், வெள்ளி 78 கிலோ பொருட்கள் என 4.55 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 22.55 கோடி சொத்துகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கணவர் சுந்தர்-சி பெயரில் மொத்தம் 18.41 கோடி சொத்துகள் உள்ளதாகவும் அவர் 8 ஆம் வகுப்புவரை படித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments