Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடியாக தயாராகும் திருட்டு ரயில்

Webdunia
வெள்ளி, 28 நவம்பர் 2014 (15:50 IST)
ஐந்து இளைஞர்களும் ஒரு போலீஸும் என்பதுதான் இந்தப் படத்துக்கு சரியான பெயராக இருக்கும். கதை அப்படி. தூத்துக்குடியில் ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் மோதல் ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் சென்னைக்கு ஐவரும் திருட்டு ரயில் ஏறுகிறார்கள் (டைட்டில் வந்திடுச்சா?)
வாணலுக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாக சென்னையில் அதைவிட பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். அது என்ன பிரச்சனை, அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதை காமெடியுடன் சொல்வதுதான் திருட்டு ரயில்.
 
திருப்பதி என்பவர் இயக்க ரக்ஷன், சரண் செல்வம், செண்ட்ராயன், ரவிக்குமார், இமான் அண்ணாச்சி, மயில்சாமி உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். கேத்தி என்பவர் ஹீரோயின்.
 
எஸ்.எஸ்.எஸ்.மூவிஸ் சலீம், அனு மூவிஸ் ரவிக்குமார் இணைந்து படத்தை தயாரித்து வருகின்றனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments