Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் முதல் வாரத்தில் ரிலீஸாகிறது ‘திருட்டுப்பயலே 2’

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:16 IST)
சுசி கணேசன் இயக்கியுள்ள ‘திருட்டுப்பயலே 2’, நவம்பர் முதல் வாரத்தில் ரிலீஸாகிறது.



 

 
சுசி கணேசன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘திருட்டுப் பயலே’. ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா, விவேக் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 40 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்தது.

11 வருடங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். கள்ளக்காதலைப் பற்றிய படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் படம் ரிலீஸாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனரோடு மோதல்… டாக்ஸிக் படத்தைத் தானே இயக்குகிறாரா யாஷ்?

ராஜமௌலி, மகேஷ்பாபுவுக்கு நன்றி சொன்ன கென்யா அமைச்சர்.. என்ன காரணம்?

பெங்களூர் பெண்கள் பற்றிய சர்ச்சைக்குரிய வசனம்… Lokah படத்தில் இருந்து நீக்கம்!

விஷ்ணு இடவனின் புதிய பயணம்: லோகேஷ், நெல்சன் போல் வருவாரா?

இந்தியில் ரீமேக் ஆகிறது 'டிராகன்' திரைப்படம்.. தயாரிப்பாளர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments