Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருட்டு பயலே பார்ட் 2 - ரீ என்ட்ரியாகும் சுசிகணேசன்

திருட்டு பயலே பார்ட் 2 - ரீ என்ட்ரியாகும் சுசிகணேசன்

திருட்டு பயலே பார்ட் 2 - ரீ என்ட்ரியாகும் சுசிகணேசன்
, வெள்ளி, 27 மே 2016 (11:05 IST)
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனரான சுசி கணேசனின் வரவும், மணிரத்னம் ஸ்கூல் என்ற கவுரவமும் சிறப்பாகவே அமைந்தது.


 


திருட்டு பயலே படத்தின் வெற்றி அவரையே கொஞ்சம் திணறடிக்கச் செய்தது. அதன் பிறகு விக்ரமை வைத்து அவர் இயக்கிய அகலக்கால் படம்தான் பாதாளத்தில் தள்ளியது. அது என்ன அகலக்கால் படம்? கந்தசாமி படத்தைத்தான் சொல்கிறோம். 
 
அந்தப் படத்தை விமர்சகர் ஞாநி கிழிக்க, பதிலுக்கு சுசி கணேசன் ஞாநியை கடுப்படிக்க, படமும் ப்ளாப்பாக, மும்பைக்கு வண்டியேறினார் சுசி. திருட்டு பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்வதுதான் நோக்கம். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்தார். ஆனால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வேண்டுமே?
 
மும்பை இனி தேறாது என்ற நிலையில் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். திருட்டு பயலே இரண்டாம் பாகம்தான் சுசியின் டார்கெட். கதை ரெடி. ஆனால், ஆர்யா உள்பட எந்த ஹீரோவும் சுசியின் ரயிலுக்கு தலை கொடுக்க தயாரில்லை. 
 
பேசாம திருட்டு பயலேயில் நடித்த ஜீவனையே முயற்சி பண்ணலாமே.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டைக்காட்சியில் விபத்து - மருத்துவமனையில் விஷால்