Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நானும் மனிதன்தான் என்னிடமும் தவறு இருக்கும்…” ராஜினாமா குறித்து திருப்பூர் சுப்ரமண்யன் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (13:59 IST)
தமிழக அரசின் அரசாணைகளை மதிக்காத திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ்? இன்று ரிலீசாகும் சல்மான் கானின் டைகர் 3 படத்திற்கு 10 மணிக்கு முன்பாக 6 காலைக்காட்சிகள் திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான டிக்கெட் புக்கிங் ஸ்கீர்ன் ஷாட்களை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கண்டனங்களை தெரிவித்திருந்தனர். சம்மந்தப்பட்ட சக்தி சினிமாஸின் உரிமையாளர் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சக்தி சினிமாஸுக்கு விளக்கமளிக்க கோரி நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் ராஜினாமா குறித்து பேசியுள்ள திருப்பூர் சுப்ரமண்யம் “தமிழக அரசின் சிறப்புக் காட்சி தொடர்பான விதிமுறை இந்தி படத்துக்கு பொருந்தாது என நினைத்து எனது தியேட்டர்காரர்கள் சிறப்புக் காட்சியைப் போட்டுவிட்டார்கள். நானும் மனிதன்தான். என்னிடமும் தவறு இருக்கும். இந்த சின்ன விஷயத்தை பெரிதாக்கியதால் நான் ராஜினாமா செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments