ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

Prasanth K
வெள்ளி, 7 நவம்பர் 2025 (11:43 IST)

கவுரி கிஷனின் உடல் எடை குறித்து சினிமா பத்திரிக்கையாளர் ஆட்சேபணையான கேள்விகளை கேட்டது தொடர்பாக நடிகை குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அதர்ஸ். இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் நேற்று நடந்த பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், கவுரி கிஷனின் உடல் எடை குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கவுரி கிஷனுக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பூ “பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத்துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள். ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது?? என்ன ஒரு அவமானம்! தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கௌரிசங்கருக்கு பாராட்டுகள். அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா? மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் குறித்து நான் பேட்டியில் கூறியது என்ன: அஜித்தின் விளக்க அறிக்கை..!

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments