Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் படத்தில் இணைந்த தெருக்குரல் அறிவு!

vinoth
திங்கள், 18 மார்ச் 2024 (07:15 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது படத்தின் முக்கியமானக் காட்சிகளை கேரளாவில் படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தெருக்குரல் அறிவு ஒரு பாடலை எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பாடல் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்ட் என்ற பாடலை அறிவு எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments