திரையரங்குகளை இழுத்து மூட முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (17:16 IST)
டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களான கியூப் மற்றும் யுஎஃப்ஓ திரைப்படங்களை திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய  அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கமும், டிஜிட்டல் நிறுவனங்களும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச் 1 முதல் புதிய படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்தது

இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில்  புதிய படங்கள் வெளியாகவில்லை. எனவே பல திரையரங்குகளில் 25% பார்வையாளர்கள் கூட இல்லாமல் ரிலீஸ் ஆன படங்களே மீண்டும் திரையிடப்பட்டு வந்தன

இந்த நிலையில் இன்று சென்னையில் திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தத்தை தொடரந்தால், திரையரங்குக்களை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனனத்து திரையரங்குகளும் மூடப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது

இன்றைய டெக்னாலஜி உலகில் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகளின் உதவி தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களுக்கு விற்பனை செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments