Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்றும் திரைப்படக் காட்சிகள் ரத்து!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (11:59 IST)
நேற்று சென்னையில் தொடர்ந்து 30 மணிநேரத்துக்கும் மேலாக கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயல் இப்போது ஆந்திராவின் நெல்லூர் அருகே கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. நேற்று முழுவதும் பெய்த பெருமழையால் சென்னையின் சில பகுதிகளில் 40 செமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இந்த புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர்களை நியமித்து தொடங்கியுள்ளார். மழைக் காரணமாக நேற்றும் இன்றும் நான்கு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு மாவட்டங்களில் நேற்று திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மிஷ்கின்?

தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments