Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விக்ரம்’ படம் பார்த்தவர்களுக்கு பணம் வாபஸ் கொடுத்த தியேட்டர்: என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (07:33 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது
 
இந்த நிலையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள லட்சுமி திரையரங்கில் விக்ரம் படம் திரையிடப்பட்ட நிலையில் விக்ரம் படம் பார்த்த ரசிகர்களுக்கு பணம் திருப்பித் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
நேற்று காலை 11 மணி காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென சவுண்ட் இல்லாமல் ஊமை படம் போல் ஓடியது. இதனால் ரசிகர்கள் கொந்தளித்து ஆரவாரம் செய்தனர். அந்த தியேட்டரில் ஆடியோவில் பிரச்சனை இருந்ததால் அதை சரி செய்து கொண்டு இருப்பதாகவும் விரைவில் சரியாகிவிடும் என்றும் திரையரங்க நிர்வாகத்தினர் தெரிவித்தனர்
 
ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் ஆடியோ சரி செய்யவில்லை என்பதால் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தியேட்டர் நிர்வாகம் பணத்தை திருப்பிக் கொடுத்தது. இதனை அடுத்து பணம் திருப்பிக் கிடைத்தாலும் படத்தை முழுமையாக பார்க்க முடியவில்லையே என்ற அதிருப்தியுடன் ரசிகர்கள் வெளியே சென்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

’ஜனநாயகன்’ படத்தை வாங்க ஆளில்லையா? வாங்குவதற்கு போட்டியா? இன்னும் வியாபாரம் ஆகவில்லை

நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் வந்ததும் தெறித்து ஓடிய அஜித் பட நடிகர்!

வரதட்சணை வாங்கி திருமணம் செய்தேனா? ரம்யா பாண்டியன் விளக்க வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments