Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமன்னன் படத்துக்கு அதிக ஷேர் கேட்கும் தயாரிப்பு நிறுவனம்.. அதிருப்தியில் தியேட்டர் அதிபர்கள்!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (10:04 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தை வெளியிடும் திரையரங்க உரிமையாளர்கள் மாமன்னன் படக்குழுவினரால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை திரையிட படக்குழுவினர் அதிக தொகையை பங்காக கேட்பதுதான் காரணமாம்.

வழக்கமாக திரையிடப்படும் படங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளருக்கு 60 சதவீதமும் திரையரங்க உரிமையாளருக்கு 40 சதவீதமும் கொடுக்கப்படுமாம். ஆனால் மாமன்னனுக்கு தயாரிப்பாளர் தரப்பில் 70 சதவீதம் கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments