Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிவர காத்திருக்கும் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள்!!

வெளிவர காத்திருக்கும் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள்!!

வெளிவர காத்திருக்கும் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள்!!
, வெள்ளி, 7 அக்டோபர் 2016 (13:04 IST)
2015 -ல் வெளிவந்த நானும் ரவுடி தான், 2016-ல் வெளியாகிய சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது. வரவிருக்கும் றெக்க, படமும் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடத்தில் றெக்க அவரது ஆறாவது படம்.


 
 
இன்று சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதியின் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க மூன்று படங்களும் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபகாலங்களில் இந்த சாதனையை வேறெந்த கதாநாயகனும் செய்ததில்லை. இனிமேலும் செய்வது கடினம்.
 
இந்த வருடம் மட்டும் இதுவரை விஜய் சேதுபதிக்கு ஆறு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. மேலும் விஜய் சேதுபதியின் படங்கள் இன்னும் இரண்டு உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக்கொண்டிருந்த இடம்பொருள் ஏவல் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனை நேற்று அதன் இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.
 
அடுத்து படம் விஜய்சேதுபதி - காயத்ரி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் மெல்லிசை. இதுவும் நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்த படம். அடுத்த மாதம் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள் என்பது குறிப்படதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த வருடம் ரஜினி சார் படம் - தனுஷ் பேட்டி