Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் – நடிகர் விஷால் அறிவிப்பு

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (16:07 IST)
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக, மே 30ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர்கள் சங்கத்  தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

 
 
கடந்த சில வருடங்களாகவே திருட்டு விசிடிக்கு எதிராகப் போராடி வருகிறார் விஷால். நடிகர் சங்க செயலாளராக ஆனதில் இருந்து அதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ஆகியிருப்பதால், திருட்டு விசிடியை ஒழித்து விட்டுத்தான் மறுவேலை என்று சதா சர்வ காலமும் அதிலேயே ஈடுபட்டு இருக்கிறார். 
 
சமீபத்தில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்தபோது கூட, இதுதொடர்பாக கோரிக்கை வைத்தார் விஷால்.  இந்நிலையில், சற்றுமுன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷால், “திருட்டு விசிடியை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மே 30ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில்  ஈடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் பற்றி பரவிய வதந்தி… ஆனா உண்மை இதுதானாம்!

விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் பற்றி அறிவித்த பிரபல ஓடிடி!

வாழ்நாள் கனவு நிறைவேறியது… மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி!

தான் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ரவி மோகன்!

300 கோடி கலெக்‌ஷன் கொடுத்த ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’.. சுட சுட தொடங்கியது ரீமேக் வேலைகள்…!

அடுத்த கட்டுரையில்
Show comments