Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (11:05 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.
‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், ‘விஜய் 62’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கிரீஷ் கங்காதரன், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப்  படத்துக்கும் இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆர்ட் டைரக்டராக சந்தானம் பணியாற்ற, எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.
 
‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈசிஆரில் பூஜையுடன் இன்று தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments