Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் - ப்ளூசட்டை மாறன் டுவிட்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:10 IST)
இயக்குனர் கெளதம் மேனனுக்கும், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறனுக்குமான வார்த்தை மோதல் வலுத்து வரும் நிலையில், மீண்டும் கெளதம் மேனனை   சீண்டியுள்ளார் ப்ளூசட்டை மாறன்.

வேல்ஸ் பிலிம்ஸ்ட் இண்டர் நேசனல் சார்ப்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில்,  கெதளம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸான படம் வெந்து தணிந்தது காடு.

இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் பற்றி ப்ளு சட்டை மாறன் தன் Tamiltalkies என்ற யூடியூப் தளத்தில், வெ.த.கா படத்தைப் பற்றிய விமர்சனம் செய்து வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.

அதில், இயக்குனர் கெளதம் மேனனை வாய்ஸ்ஓவர் பைத்தியம்,ம; சிம்புவை வீணாபோனவன் டான் ஆன கதை; அப்படத்தில் நடித்த  நடிகர் ஜாஃபரின் உயரத்தையும் கேலி செய்திருந்தார்.

இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, பேசிய சிம்பு, உருவக்கேலி செய்வதது தவறு என்று தன் கருத்தைக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலாடியாக ப்ளூசட்டை மாறன் தன் டுவிட்டரில்,

1)உருவகேலி செய்வது தவறு - சிம்பு.

Dum 2003 Movie - Kannamma Kannamma song lyrics:
வாடி பொட்ட புள்ள. வளஞ்சு நெளிஞ்சி போற புள்ள..
கண்ணடிச்சி பாத்தாலும்
கண்டுக்கல...

உன் கற்பு போகும்படி இப்போ என்ன ஆயிடுச்சு?

பொட்டபுள்ள, கற்பு. Great respect for tamil women given by Simbu.

2) Kaalai 2008 Movie - Kutti Pisase song lyrics:

'ட்வின் டவர் மேலே ஏர்கிராஃப்ட் போலே என் மேல மோதுனா என்னாவது?'

ஹீரோயின் 'உன் மேல மோதி உற்சாக கூடி உண்டாக்கத்தானே.. நான் மே மாசம் பெண்ணானது'

What is the meaning for twin tower and may maasam penn anadhu? Clarify Mr.Simbu- என்று பதிவிட்டிருந்தார்.

அதன்பின் ஒரு வீடியோவை வெளியிட்ட கெளதம் மேனன்,  ப்ளூசட்டை மாறன் பெயரை சொல்லக்கூடாது என நினைக்கிறேன். அவர் மீது வெறுப்பும் கடுப்புமாக உள்ளது, யூடியூபில் சம்பதிக்க இவ்வாறு ரிவ்யூ கொடுக்கிறார்.   உண்மையிலேயே இறங்கி எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுவதாகக் கூறினார்.


இந்த நிலையில், தற்போது,ப்ளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில், சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர்.

கௌதம் வாசுதேவ்..மேனன். என்று பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையேயான வார்த்தை மோதல் சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐமேக்ஸ் பார்மெட்டில் வெளியாகும் புஷ்பா 2… படக்குழு அறிவிப்பு!

விரைவில் உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் 2… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அனைவரிடமும் வெற்றிடம் உள்ளது… திரைப்பட விழாவில் ரஹ்மான் பேச்சு!

திரையரங்குகளில் கண்டுகொள்ளப் படாத ‘பிளடி பெக்கர்’ ஓடிடி ரிலீஸாவது கவனம் பெறுமா?

ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 முதல் பார்வை.. ஷூட்டிங்குக்குத் தயாரான படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments