பெண்கள் மட்டுமே நடிக்கும் படத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (11:01 IST)
பெண்கள் மட்டுமே நடிக்கும் கன்னித்தீவு படத்தில் முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது.


 
சண்டக் கோழி 2, சர்கார், மாரி 2 போன்ற மாஸ் ஹீரோ படங்களை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.  குறிப்பாக வெல்வட் நகரம், சக்தி, அம்மாயி, கன்னிராசி, காட்டேரி, நீயா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது கன்னித்தீவு படத்தில் நடிக்கிறார். இது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் படமாகும். இதில் வரலட்சுமியுடன் ஐஸ்வர்யா தத்தா, ஆஸ்னா ஜாவேரி, சுபிக்ஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கன்னித்தீவு படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். 


ஆரோலி சோரெல்லி இசையமைக்கிறார். சோட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். கன்னித்தீவு படத்தின் பூஜை நேற்று இனிதே நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இது தொடர்பாக வரலட்சுமி, தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments