Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமயமலையில் தியான மண்டபம் கட்டிய நடிகர் ரஜினிகாந்த்

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (15:40 IST)
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு அடிக்கடி ஆன்மீக பயணம் செய்வது வழக்கம். அங்குள்ள பாபா குகைகளில் அவர் தியானம் செய்வதுண்டு. கபாலி, 2.0, காலா என தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அவர் இமயமலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

 
மகா அவதார் பாபாஜியின் தீவிர பக்தர் நடிகர் ரஜினிகாந்த். பாபாவின் குகை அமைந்துள்ள இமய மலைக்கு அடிக்கடி சென்று தியானம் செய்வது அனைவரும் அறிந்ததே. அவர் செல்வதை அறிந்ததும் ஏராளமான மக்களும், அவரது ரசிகர்களும் பாபா  குகைக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

 
தற்போது இமய மலையில் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்களும் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும், தியானம் செய்வதற்கு உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர். இதில் பக்தர்கள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். இந்த மண்டபத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் நவம்பர் 10ஆம் தேதி அன்று  நடைபெறவுள்ளது. 
 
இந்த விழாவில் ரஜினி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ரஜினிகாந்த் பங்கேற்பாரா என்ற தகவல்  இன்னும் தெரியவில்லை.

 

தொடர்புடைய செய்திகள்

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

கிளாமர் டிரஸ்ஸில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வைரலாகும் அட்டகத்தி நந்திதா!

அஜித் படத்தில் கீர்த்தி சுரேஷா?... குட் பேட் அக்லி லேட்டஸ்ட் அப்டேட்!

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் கருடன்… ஹீரோவாக ஜெயித்த சூரி!

அடுத்த கட்டுரையில்
Show comments