Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பீஸ்ட் '' படத்தின் முக்கிய அப்டே... விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:18 IST)
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தைப் பற்றிய முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது .

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.

ஏற்கனவே படத்தின் வியாபாரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பித்து விட்டது. தமிழ் திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் இப்போது வெளிநாட்டு விநியோக உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐங்கரன் நிறுவனம் தமிழில் படங்களை தயாரித்து வந்த நிலையில் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஏப்ரல் 12 ஆம் தேதியே படத்தின் ப்ரீமியர் ஷோ நடக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு முன்பாகவே அமெரிக்க ரசிகர்கள் பீஸ்ட் படத்தை பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 இப்படத்தில் நடிகர் விஜய், பூஹா ஜெக்டெ உள்ளிட்ட  நடிகர் ஒரு அலுவலகத்தில் நிற்பது போன்ற புகைப்படத்தை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இது  தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகிறது. இந்தக் காட்சி இப்படத்தின் மிகப்பெரிய காமெடியாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், ரசிகர்களைப் போலவே நாங்களும் படத்தின் டிரைலருக்கான காத்திருக்கிறோம்  நண்பார் எனப் பதிவிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments