Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாஜால் திரையரங்கில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் ரத்து: நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (14:12 IST)
சென்னை மாயாஜால் திரையரங்கில் 3 நாட்களுக்கு  'தி கேரளா ஸ்டோரி'  என்ற திரைப்படம் திரையிடப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இஸ்லாமிய அமைப்புகள் இந்த படம் வெளியான தியேட்டருக்கு எதிரே போராட்டம் நடத்தி வருகின்றன

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சென்னை கானாத்தூர் மாயாஜால் திரையரங்கில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மூன்று நாட்களுக்கு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது

இந்த திரையரங்கில் இரவு 7:30 மற்றும் 10.30 காட்சிகள் தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த காட்சிகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாயாஜால் திரையரங்கில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments