Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாபால் நடிக்க இருக்கும் இந்தி ரீமேக்கில் தமிழ் படம்

Webdunia
சனி, 28 நவம்பர் 2015 (14:05 IST)
சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானவர் அமலாப்பால். அதனையடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மைனா, தெய்வதிருமகள் போன்ற படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பை வெளிப்படித்தியுள்ளார்.


 

 
தெய்வத்திருமகள் படத்தின்போது இயக்குனர் விஜையுடன் ஏற்பட்ட காதலால், திருமணம் செய்து கொண்டார்.
 
இந்நிலையில் கணவரின் படத்தயாரிப்பு நிறுவனத்தை அவருடன் சேர்ந்து கவனித்து வந்தார். புதிய படவாய்ப்புகளை தவித்து வந்தார். இதனை அடுத்து ‘பசங்க–2’ படத்தில் சூர்யா அழைத்ததால் அமலாபால் நடிக்க ஒப்புக் கொண்டார். அதில் அமலாபால் சூர்யாவின் மனைவியாகவும், ஆசிரியையாகவும் நடித்து இருக்கிறார். இந்த படம் டிசம்பர் 24–ல் திரைக்கு வரும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமலாபால் இந்தி ‘ரீமேக்’ படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியில் ஸ்வாரா பாஸ்கர் நடித்த ‘நில்பட்டேசனட்டா’ என்ற படம் தமிழில் ‘ரீமேக்’ ஆகிறது. பல்வேறு விருதுகளை படத்துக்கும், இதில் நடித்த நடிகைக்கும் பெற்றுக் கொடுத்த படம் என்பதால் அமலாபால் இதில் நடிக்க இருக்கிறார்.
 
இந்தி ரீமேக்கில் நடிக்கும் இப்படத்தில் அமலாபால் மகளாகவும், ரேவதி அம்மாவாகவும் நடிக்க இருக்கிறார்கள்.  இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்கும் உள்ள பாசத்தை பற்றி சொல்லும் படம். 
 
இந்தியில் இப்படத்தை இயக்கிய டைரக்டர் நித்திஷ் திவாரியின் மனைவி அஸ்வினி அய்யருடன் இணைந்து தனுஷ் தயாரிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவருடன் இணைந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கபோவதாக தெரியவருகிறது. 
 
இது தொடர்பான பேச்சுக்கள் நடந்து வருவதாக தெரிகிறது.  கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments