Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பேசுங்கம்மா வெங்காயம்': நித்யாவை வெறுப்பேற்றும் மும்தாஜ்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (09:37 IST)
பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே பிரச்சனையுடன் இருக்கும் பாலாஜியையும் அவருடைய மனைவியையும் உள்ளே நுழைய வைத்தது அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கவா? அல்லது பிரச்சனையை பெரிதாக்கவா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.
 
இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக இருவரும் நட்புடன் ஒருவரை ஒருவர் சிரித்து பேசி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று 'வெங்காயம்' பிரச்சனையில் இருவரும் முட்டி கொண்டது வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
'பொறியலில் வெங்காயம் போட வேண்டும் என்று பாலாஜி, நித்யாவை பார்த்து கூற அதற்கு நித்யா பதில் கூறாமல் முறைக்கின்றார். அப்போது குறுக்கிட்ட மும்தாஜ், 'பேசுங்கம்மா வெங்காயம்' என்று கூறி நித்யாவை வெறுப்பேற்றுகிறார். மேலும் உங்க ரெண்டு பேருடைய பெர்சனல் விஷயத்துக்கான சண்டையால, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு கவலை ஏற்படுகிறது என்று மும்தாஜ் அறிவுரை கூறினாலும் பாலாஜியும் நித்யாவும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டது இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால் இதெல்லாம் ஒரு சண்டைன்னா காயத்ரி போட்டதற்கு பெயர் என்ன என்று நெட்டிசன்கள் வழக்கம் போல் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments