Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மாமன்னன்’’ பட புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

Webdunia
வியாழன், 25 மே 2023 (18:25 IST)
மாமன்னன்   படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில்    2-வது சிங்கில் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்  மாமன்னன் என்ற படத்தை  இயக்கி வருகிறார்.

இப்படத்தில் வைகைப்புயல்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன்  ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின்  ஷூட்டிங் சமீபத்தில்  நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடெக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில் மாமன்னன்  பட முதல் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில்,   கடந்த 19 ஆம் தேதி மாமன்னன் பட முதல் சிங்கில் ‘’ராசாகண்ணு’’ என்ற பாடலை  படக்குழு வெளியிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்,  பாடலாசிரியர் யுகபாரதி எழுதின இப்பாடலை வடிவேலு பாடியிருந்தார். இணையதளத்தில் வைரலான  இப்பாடலை இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த  நிலையில், மாமன்னன் பட 2 வது சிங்கில் பற்றிய அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அதில்,  மாமன்னன் பட 2 வது பாடல் வரும் 27 ஆம் வெளியாகவுள்ளதாக தெரிவித்து, ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

தயாரிப்பாளர் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?... கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

அடுத்த கட்டுரையில்
Show comments