Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லூசு, கிறுக்கன்: செண்ட்ராயனை கடுப்பேற்றும் மகத் வீடியோ

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (12:13 IST)
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான மகத் ஆரம்பத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே நல்லபிள்ளையாக இருந்தார். ஒருசில நாட்களில் அவருடைய உண்மையான சொரூபம் தெரிந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுவிட்டு மற்றவர்களை கோபப்படாதே, டென்ஷன் ஆகாதே என்று கூறுவதும் சிம்பு ஸ்டைலில் பேசுவதும் இவரை வீட்டை விட்டு உடனே வெளியே அனுப்புங்கப்பா என்றே சொல்ல தோன்றுகிறது.
 
அந்த வகையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் செண்ட்ராயனுக்கு மகத்துக்கும் டீ கப் சரியாக சுத்தம் செய்யவில்லை என்பது குறித்து பிரச்சனை எழுகிறது. இதில் ஒரு கட்டத்தில் செண்ட்ராயனை லூசு, கிறுக்கன் என்று மகத் பேசுகிறார். உண்மையில் யாரு லூசு, யார் கிறுக்கன் என்பது மகத் எவிக்சன் லிஸ்ட்டில் வரும்போது தெரிந்துவிடும்
 
மகத் இவ்வாறு பேசியதால் இனிமேல் என்னிடம் பேசாதே என்று செண்ட்ராயன் கூறுகிறார். மகத்திடம் அடிக்கடி ஏற்கனவே மோதியுள்ள மும்தாஜ், செண்ட்ராயனை சமாதானப்படுத்துகிறார். கிட்டத்தட்ட எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்துவிட்ட மகத் வீட்டை விட்டு வெளியேறும் நாள் வெகுதொலைவில் இல்லை.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments