Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அஜித்63' படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (14:45 IST)
அஜித்குமார்- ஆதிக் ரவிச்சந்திரன் இணையவுள்ள ‘’அஜித்63’’ படம் பற்றிய புதிய தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற  படம் மூலம் இயக்குனரானார். அதன்பின், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா ஆகிய படங்களை இயக்கினார்.

இதையடுத்து, இவர் இயக்கத்தில் முன்னணி நடிகர்  விஷால். நடிப்பில் உருவான பட மார்க் ஆண்டனி.  இப்படம் கடந்தாண்டு வெளியாகி வசூல் குவித்தது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் எல்லோராலும் பாராட்டப்பட்ட நிலையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து மார்க் ஆண்டனி ரவிச்சந்திரன் வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது அஜித்குமார் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில்,  அஜித்- ஆதிக் ரவிச்சந்திரன் இணையவுள்ள ‘அஜித்63’ என்ற புதிய படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கலாம் என தெரிகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments