Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'லியோ' பட டிரைலரை பாராட்டிய பிரபல இயக்குனர்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (20:13 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் லியோ.

இப்படத்தை  லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் லியோ படத்திற்கு  சென்சார் போர்டு  யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று  மாலை 6: 30 மணிக்கு  சன் டிவியின் யூடியூப் சேனலில் ரிலீஸானது.

இந்த டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்த டிரைலரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும்  நிலையில் 'மாமன்னன்' பட இயக்குனர் மாரி செல்வராஜ் தன் சமூக வலைதள பக்கத்தில்,    'மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக கூறி  டிரைலரையும் படக்குழுவினரையும்' பாராட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments