Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாருக்கு சானிடைசரை இலவசமாக வழங்கிய பிரபல நடிகர் !!!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (16:28 IST)
போலீஸாருக்கு சானிடைரை இலவசமாக வழங்கிய பிரபல நடிகர் !!!

தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த், கைகளைச் சுத்தப்படுத்தும் ஆயிரக்கணக்கான சானிடைசர் பாட்டில்களை காவல்துறையினருக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினக்கூலிகளாக உள்ள மக்கள் மற்றும் அதிக அளவில் பணியில் ஈடுபடும் கட்டிய தொழிலாளர்கள், குழந்தைகள் போன்றவர்கள் உணவுக்கு கஷ்டப்படும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் பசி பட்டிணியையும் , வேலையில்லாத தொழிலாளர்களின் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நல்ல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர்.
 
ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும்  அவரது மகன் ராம்சரணும் நிதி உதவி வழங்கிய நிலையில் , சிரஞ்சீவியின் தம்பியும்  ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் பவன் கல்யான் ரூ.2 கோடி உதவி அளித்துள்ளார்.  அதில், ஆந்திரா  தெலுங்கான மாநிலங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அளிப்பதாகவும்,மேலும்  ரூ. 1 கோடி நிதியை பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் தோனி ரூ. 1 லட்சம் ரூபாயும், நடிகர் பிரபாஸ் ரூ. 4 கோடியும் , நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 1.25 கோடி, நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி  கொடுத்துள்ளனர்.

இந்த வரிசையில்,  இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, கொரோனா தடுப்பு பணிக்காம ரூ. 80 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். நடிகர் சிவகாந்த்திகேயன் ரூ. 25 லட்சம் உதவி அளித்துள்ளார்.

மேலும், தெலுங்கு நடிகர் சித்தார்த், கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசர் பாட்டில்களை காவல்துறையினருக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

அதாவது, காவல்துறையினருக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டி, அவர்களின் சேவையை மனதில் கொண்டு தெலுங்கு நடிகர் சித்தார்த், காவல்துறையினருக்கு சானிடைசர் பாட்டில்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் நிகில் தனது டுவிட்டர் பககத்தில் சில போட்டோகளை பதிவிட்டுள்ளார். அது வைரல் ஆகி வருகிறது.

நடிகர் நிகில், ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிக்காக சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This batch of Sanitizers along with a personal note of thanks, being delivered to our Police Force who r on the front lines protecting us

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் வருங்கால கணவர் அவர்தான்.. போட்டுடைத்த ராஷ்மிகா! - யூகங்களுக்கு முடிவா?

நாம எந்த மண்ணுல இருக்குறோமோ அந்த மொழிதான் பேசணும்… புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் கருத்து!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இருந்தும் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்!

கங்குவா தோல்வியால் சுக்குநூறான சூர்யாவின் பாலிவுட் கனவு… கைவிடப்பட்ட கர்ணா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments