Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியான அரசாணை

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (18:19 IST)
நடிகர் விஜய்யின்  லியோ படம் வரும் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் லியோ பட சிறப்பு காட்சி குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதில், நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில், விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லியோ பட சிறப்புக் காட்சி பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுபற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, லியோ பட முதல் சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குத்  தொடங்கும் எனவும், கடைசிக் காட்சி நள்ளிரவு 1:30 மணி வரை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபபர் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி 4 காட்சிகளுடன் சேர்த்து 1 சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சமீபத்தில்  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் விஜய்யின் பெயரை குறிப்பிடும் இடத்தில் ‘தளபதி விஜய்’ எனக் குறிப்பிடப்பட்டது சர்ச்சையான   நிலையில், லியோ பற்றிய புதிய அரசாணையில்  விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

விஷாலின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்!.. வெளியான தகவல்!

மீண்டும் இணையும் மெஹந்தி சர்க்கஸ் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments