Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதுரங்க வேட்டை... சிக்குவாரா அரவிந்த்சாமி...?

சதுரங்க வேட்டை... சிக்குவாரா அரவிந்த்சாமி...?
, வியாழன், 1 செப்டம்பர் 2016 (13:38 IST)
தமிழில் தனி ஒருவனை முடிக்கும் முன்பே இந்தியில், டியர் டாட் படத்தில் நடித்தார் அரவிந்த்சாமி. அப்படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.


 

 
 
தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கான துருவாவில் அதே வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் போகன் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார். விரைவில் ஹாலிவுட் படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. 
 
இந்நிலையில், சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இரண்டாம் பாகத்துக்கான கதையை சதுரங்க வேட்டையை இயக்கிய வினோத் எழுதியுள்ளார். ஆனால், அவர் படத்தை இயக்கப் போவதில்லை. அவர் ஸ்டுடியோ கிரீனுக்காக கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
 
சதுரங்க வேட்டை படத்தை தயாரித்த மனோபாலாவே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். அரவிந்த்சாமியை எப்படியும் அதில் நடிக்க வைப்பது என்று முயற்சி எடுத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினி பாப்கார்ன் - தொலைக்காட்சி தொடருக்காக இணையும் வெற்றிமாறன், கௌதம், பாலாஜி மோகன்