Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சீதா ராமம் ''படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் ! ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (17:06 IST)
துல்கர் சல்மான் டிப்பில் வெளியான குரூப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்கள் வெளியானது.

இப்படங்களைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சில நாட்களான இப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியான  நாள் முதற்க்கொண்டு இப்போது வரை வசூல் குவித்து வருகிறது. இப்படத்திற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழகத்தில் இதன் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர்.

இந்த நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் உலகளவில் ரிலீஸாக இருந்த  சீதாராமம் படத்தில் மதம் சார்ந்த சில விசயங்கள் உள்ளதால், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட  நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்துள்ளன அரபு நாடுகள் தடை விதித்தனர்.
.
மலையாளிகள் அதிகம் வசிக்கும் இந்த  நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளதால் வசூல் பாதிக்கும் என மீண்டும் படக்குழு இப்படத்தை ஸ்ன்சாருக்கு விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில் அங்குள்ள சென்சார் குழு சீதா ராமம் படத்தை திரையிடலாம் என  அனுமதித்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். எனவே இன்று முதல்  ஐக்கிய அரபு நாடுகளில் இப்படம் ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments