Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமர்க்களமாக வெளியிடப்பட இருக்கும் ராஜாவின் ஆயிரமாவது படப் பாடல்கள்

அமர்க்களமாக வெளியிடப்பட இருக்கும் ராஜாவின் ஆயிரமாவது படப் பாடல்கள்
, சனி, 25 அக்டோபர் 2014 (12:31 IST)
பாலா படத்தின் தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் ஆயிரமாவது படம். இந்தப் படத்தில் இடம்பெறும் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களை மதுரையையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கிராமிய இசைக்கலைஞர்களை வைத்து பாட வைத்து இசையமைத்துள்ளார் இளையராஜா.
 
முழுக்க கிராமிய மணத்துடன் தயாராகியிருக்கும் இந்தப் பாடல்களின் இறுதி மிக்சிங்கையும் இளையராஜா முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆயிரமாவது படம் என்பதால் பாடல்களை மிகப்பிரமாண்டமாக வெளியிட பாலா முடிவு செய்திருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
 
தாரை தப்பட்டையில் சசிகுமாரும், வரலட்சுமியும் முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil