Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி: நாசர்

மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி: நாசர்
, திங்கள், 19 அக்டோபர் 2015 (05:27 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற காரணமாக இருந்த தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி என நாசர் தெரிவித்துள்ளார்.


 
மிகவும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியானது.  இதில், விஷால் அணியினர் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றினர்.
 
அனைவரும் வெற்றி பெற்ற பின்பு, செய்தியாளர்களிடம் நாசர் கூறியதாவது:-
 
இந்த தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நல்ல விஷயம் நடைபெற்றுள்ளது.
 
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற காரணமாக இருந்த தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி. அதுபோலவே காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சங்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாக்களித்த நினைத்த அனைவருக்கும் நன்றி என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil