Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''தமிழ் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி...லவ் யூ நண்பா''- விஜய் சேதுபதியை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (21:11 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர்  அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ஜவான்.

பிரமாண்டமாக  உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில்  விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

வரும்  செப்டம்பர் 7 ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் தமிழில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்திற்கு சமீபத்தில் மத்திய சென்சார் போர்ட்டு யு/ஏ சான்றிதழ்  சான்றிதழ் வழங்கியது..

இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நேரத்தில், நேற்று  இயக்குநர் அட்லீ,  ஜவான் பட பிரிவியூ வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அனைத்து பிளாட்பார்மிலும் இதை 123 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

சினிமாத்துறையினர் இயக்குனர் அட்லீயை பாராட்டி வருகின்றனர். இந்த  நிலையில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,   இயக்குனர் அட்லீக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதேபோல்,  நடிகர் விஜய்சேதுபதியை டேக் செய்து, ‘’ உங்களுடன் பணியாற்றுவது பெருமையாக உள்ளது.  ஷூட்டிங் செட்டில் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததற்கும், சுவையான உணவுக்கும் நன்றி.. லவ் யூ  நண்பா ! ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால்… அடுத்தடுத்த ப்ளாப்களால் படத்தைக் கைவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்!

முருகதாஸின் அடுத்த படத்தில் ஃபஹத் பாசில்… பாலிவுட்டில் எண்ட்ரி!

106 வயசுல எப்படி சண்டை போட முடியும்… இந்தியன் தாத்தா குறித்த கேள்விகளுக்கு ஷங்கர் பதில்!

தீபிகாவின் குழந்தைதான் கல்கி படத்தை உருவாக்கி உள்ளது… கமல்ஹாசன் பேச்சு!

அட்லியின் பாலிவுட் தயாரிப்பான பேபி ஜான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments