Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிந்திக்குப் போகும் ‘தனி ஒருவன்’

ஹிந்திக்குப் போகும் ‘தனி ஒருவன்’
, வெள்ளி, 7 ஜூலை 2017 (13:59 IST)
ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்த ‘தனி ஒருவன்’, ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.



 
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்த பிளாக் பஸ்டர் படம் ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 106 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்தது. 2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், த்ருவா மற்றும் ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

ஹிந்தியிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு ஹீரோக்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியாக சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. சபீர் கான் இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடல் அழகி மரண வழக்கில் நடிகர் விக்ரம் கைது