Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸான தங்கலான்!

vinoth
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (12:57 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தங்கலான் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழைப் போலவேதான் மற்ற மொழிகளிலும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

படம் ரிலீஸாகி நான்கு மாதங்கள் கடந்தும் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை. படத்தின் ஓடிடி வெர்ஷனை குறிப்பிட்ட தேதியில் கொடுக்காமல் படக்குழு தாமதப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாகவும் படத்துக்குக் கிடைத்த கலவையான விமர்சனங்கள் காரணமாகவும் படத்தை பேசிய விலை கொடுத்து வாங்க நெட்பிளிக்ஸ் மறுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது திடீரென தங்கலான் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் தங்கலான் திரைப்படம் ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் கதை… கௌதம் மேனன் இயக்கம்… ஹீரோ சிம்பு – தயாராகும் அதகளமான கூட்டணி!

சுதா கொங்கரா & சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?.. வெளியான தகவல்!

பெட்ரோல் பங்க் திறப்புவிழாக்களுக்கு எல்லாம் ஏன் நடிகைகளை அழைக்கிறார்கள்?... பிரபல நடிகை புலம்பல்!

ராமாயணம் முதல் பாகத்துக்கான ஷூட் முடிந்துவிட்டது… ரன்பீர் கபூர் அப்டேட்!

மீண்டும் இணையும் கமல் & லோகேஷ் கனகராஜ் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments